தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 16
Tamil Haiku Kavithai - Part 16
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 16
Tamil Haiku Kavithai - Part 16
Tamil Haiku Kavithai - Part 16
151.நெசவாளி:
----------
புத்தாடை
நெய்தும்
நெசவாளி
வாழ்க்கை
கந்தல்.
152.புல்வெளி:
------------
பூமித் தாய்க்கு
குளிர் அடிக்கிறதோ...
போர்வை போத்துகிறது,
புல்வெளி...!
153.பொம்மை:
---------
பொம்மை அழுகிறது
கண்ணீரில்லை
சிறுமியின்
கையில் !!
154.வறுமை:
-------
மகிழ்ச்சியோடு
மழலைகள் பள்ளிக்கு சென்றன...
சத்துணவுக்காக.
155.பூ:
---
மணமேடையா
பிணமேடையா
பூத்த பூ !!
156.பாடம்:
-------
மண்ணெண்ணை
விளக்கில்
ஏழை மாணவன் படித்தான்
மின் உற்பத்தி பாடம்...!
157.ஒற்றைப்பாதை:
----------------
மன தைரியம் அதிகம் தான்
அடர்ந்த
இரவில் அடர்ந்த காட்டில்
தனியாக செல்லும் ஒற்றைப்பாதை !!
158.கடவுள்:
---------
மனிதனால்
உருவாகி மனிதனை உருவாக்கியவன் என்ற பித்தலாட்டக்காரன்
159.கொசு:
------
மனிதர்களை
இரவில் தாக்கும்
போர் விமானங்கள்...
கொசு...!
160.தாஜ்மகால்:
-------------
மனைவி இறந்தற்காக
கணவன் கட்டிய
வெள்ளை புடவை.