தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 19
Tamil Haiku Kavithai - Part 19
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 19
Tamil Haiku Kavithai - Part 19
Tamil Haiku Kavithai - Part 19
181.பொட்டு:
---------
விதவை முகம் பார்க்கிறாள்
கண்ணாடியில்
ஒட்டுப்பொட்டு...
182.தேர்தல்:
----------
விதவைச்
சுவர்கள்
சுமங்கலியாகும்...
தேர்தல்
...!
183.சுமங்கலி:
------------
விதவையான
தயிர் சாதம்...
சுமங்கலியாகிவிட்டது...
ஊறுகாயின்
வரவால்...!
184.விதை:
------
விதைத்தவன்
தூங்கினான்
தூங்க மறுத்த விதையின் விலையை
வேறோருவன்
நிர்னையித்தான் !!
185.விநாயகர் சிலை:
-------------------
விற்பவன்
சிலையை கல்லாகவும் வாங்குபவனை கடவுளாகவும் பார்க்கிறான், வாங்குபவன் கல்லை சிலையாகவும் விற்பவனை கல்லாகவும் பார்க்கிறான்...
186.சிசு:
------
விளையும்
பயிர்
முளையிலே
தெரிந்தது
"ஸ்கேன்".
187.முதியோர் இல்லம்:
----------------------
விழுதுகள்
துறந்த
ஆலமரம்...
முதியோர்
இல்லம் ...!
188.தற்கொலை:
----------
வீரமான கோழைத்தனம்...
புரியவில்லையா?
கோழையால்
மட்டுமே
சாத்தியப்படும்
வீரசெயல்.
189.நிழல்:
-------
வெயிலின்
சோர்வுக்கு
நிழல் தேடினார்
மரம் வெட்டி...!
190.பகைமை :
---------
வெளித்தோற்றமே
இல்லாமல்
வளர்ந்து
நிற்கிறது
பகைமை !!
191.புழுக்கம்:
-------------
வெளியே மழை
மனதுக்குள்
புழுக்கம்
ஐஸ் வியாபாரி...!
192.பசி:
----
வேண்டாமென
வீசிய காகிதம்
வேண்டுமென
எடுத்தவரின்
வயிற்றை
பசியாற்றியது !!
193.மயக்கம்:
----------
வேர்களில்
கூட
வண்ண வண்ணப் பூக்களா...?
மரத்தடியில்
பெண்கள்...!