தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 18
Tamil Haiku Kavithai - Part 18
தமிழ் ஹைக்கூ கவிதை வரிகள் # 18
Tamil Haiku Kavithai - Part 18
Tamil Haiku Kavithai - Part 18
171.நட்சத்திரம்:
----------------
யார்சூட
மலர்ந்திருக்கின்றன
விண்வெளித்
தோட்டத்தில்
நட்சத்திரப்
பூக்கள்...!
172.கைப்பேசி:
------------
ரகசியங்களை
கேட்டாலும்
வெளியே சொல்வதில்லை
!!
173.வியர்வை:
----------
வறுமையைக்
கழுவ
புறப்படும்
நதி
வியர்வை...!
174.மழை:
----
வானம் அழுகிறது...
கண்ணீரை
ஏந்திய மண்...
சிரிக்கிறது...
175.வாழும் கலை:
---------------
வாழும் கலை என்பது வேறல்ல;
அடுத்தவரைப்
பார்த்துப்
புன்னகைப்பதே...!
176.தியாகம்:
----------
வாழ்நாள்
முழுவதும் தன்னை சுமந்த மரங்களுக்காக,
இலைகள் செய்கிறது- தியாகம்.
கோடையில்
இலை உதிரல்.
177.நிம்மதி:
----------
விடிந்து
விட்டது
இனி நிம்மதியாய்
உறங்கலாம்...
தெருவிளக்கு...!
178.உறக்கம்:
----------
விடிந்துவிடு
இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா...!
179.உழைப்பு:
----------
விடிய விடிய உழைத்தும்
வியர்வை
இல்லை
.
180.விலைவாசி:
------------
விண்ணை தொட்டது,
அன்று சந்திராயன்,
இன்று விலைவாசி...!