சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #05
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 05
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #05
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 05
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #05
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 05
41.உனது இலட்சியத்தினிடத்தில் அதிகமாக ஈடுபாடு வேண்டும். இல்லையேல் வெற்றி கிட்டுவது சிரமம்.
42.இதயமில்லாமல் வெறும் புத்திக்கூர்மை மட்டுமிருந்தால் அது ஒருவனை சுயநலக்காரனாக மாற்றிவிடும்.
43.மனிதனுக்குள் ஏற்கனவே புதைந்திருக்கும் பரிபூரணத் தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வியாகும்.
44.இன்னும் நாம் செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் செய்ய ஆற்றல் பெறவேண்டுமா? முதலில் பொறாமையை ஒழியுங்கள்.
45.எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் காரியங்களை, எண்ணும் எண்ணங்களை பொறுத்தது.
46.ஒருவன் முன்னேற முதலில் தன்னம்பிக்கையும் அடுத்து இறை நம்பிக்கையும் அவசியம்.
47.எதிர்காலத்தைப் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பது நிகழ்காலத்தையும் கெடுத்துவிடும், எதிர்காலத்தையும் கெடுத்துவிடும்.
48.மரணத்தைப் பற்றி கவலைப் படதே, நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை. அது வரும்போது நீ இருக்கப்போவதில்லை பிறகு எதற்கு கவலை?
49.உதவி கிட்டும் என்ற நம்பிக்கையுடன், அஞ்சாமல் செயலில் ஈடுபடு. எங்கிருந்தாவது உதவி உன்னை வந்து சேரும். நம்பிக்கை இருந்தால், செயல் வெற்றி பெறும்!
50.எது உண்மை, எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ அதை உடனே நிறைவேற்றுவதே நல்லது.