சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #06
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 06
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #06
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 06
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #06
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 06
51.ஒரு தலைவன் என்பவன் தன்னுடைய தலையைப் பலி கொடுக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். ஓர் லட்சியத்திற்காக நீ உன் உயிரையும் அர்ப்பணிக்கக் கூடியவனாக இருந்தால்தான் நீ ஒரு தலைவனாக இருக்க முடியும்.
52.நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது நமது முதல் கடமை.
53.கீழ்த்தரமான தந்திரங்களால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது
54.முழு மனதுடன் செயலில் முயற்சி செய்பவர், இறைவனின் உதவியையும் நிச்சயம் பெறுவார்.
55.பேச்சுத்திறமை என்பது சரியான இடத்தில சரியான சமயத்தில் சரியாகப் பேசுவது மட்டுமல்ல. தவறான வார்த்தைகளைப் பேசிவிட வேண்டும் என்று மனம் துடிக்கும்போது பேசாமல் இருப்பதும் தான்.
56.எப்படிப்பட்ட பலவீனத்தையும் வெல்வதற்கு ஒரு வழி உண்டு. பலவீனத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல் வலிமையைப் பற்றியே நம்பிக்கையுடன் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருப்பதுதான் அது.
57.எனக்காக நானே தொண்டு செய்து மோட்சத்தை அடைவதைவிட, மக்களுக்குத் தொண்டு செய்து நரகத்திற்குச் செல்ல தயாராக உள்ளேன்.
58.எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளி.
59.பலமே வாழ்வு, பலமின்மையே மரணம்.
60.எஜமானனாக இருப்பதற்கு முன் ஒருவன் வேலைக்காரனாகவும் இருக்க வேண்டும்.