சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #08
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 08
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #08
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 08
71.நன்மையைப்போலவே தீமையிலிருந்தும் மனிதன் பெரும் பாடங்களைக் கற்றுக் கொள்கிறான்.
72.ரசாயனத்தைக் கற்பவன் இயற்கை என்னும் புத்தகத்தைப் படித்தறிவது போல், ஆன்மீகத்தைக் கற்பதற்கு படிக்க வேண்டிய நூல் மனித மனம்.
73.எதிர் காலத்தில் என்ன நேருமோ என்று கணக்குப் பார்த்துக் கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது. முயன்று செயல்களை செய்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.
74.தித்திப்பும், பாராட்டும் அதிகம் போனால் திகட்டிவிடும்
75.ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப் பெரும் பணக்காரன்.
76.பகை, பொறாமை ஆகியவற்றை வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வ்ந்து சேர்ந்துவிடும்.
77.படிப்பு வெறும் தீக்குச்சியைப் போன்றது, எந்தப் பிரச்சனையோடாவது உராயும்போதுதான் அதிலிருந்து சிந்தனை சுடர் ஏற்படுகிறது
78.நீங்கள் முதலில் நல்லவனாய் வாழுங்கள்; கெடுதல்கள் எல்லாம் பறந்துபோய்விடும். உலகம் முழுவதும் மாறிவிடும்.
79.சிங்கத்தின் வீரத்துடன் அதே சமயம் மலரின் மென்மையுடன் வேலை செய்.
80.ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.