சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #09
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 09
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #09
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 09
சுவாமி விவேகானந்தர் சிந்தனை வரிகள் #09
Swami Vivekananda Inspirational quotes in Tamil - 09
81.உன்னை தியாகம் செய்வதனால் மட்டுமே பிறரின் இதயங்களை நீ வெல்ல முடியும்.
82.உன் நிலை எப்படியிருந்தாலும் அதுகுறித்து நீ கவலைப்படத் தேவையில்லை லட்சியத்தை நோக்கி முன்னேறியபடியே இரு.
83.அறிவை முதலீடாக வைத்து அரண்மனை வாங்கலாம். ஆசையை முதலீடாக வைத்தால் துன்பத்தைத்தான் வாங்க முடியும்.
84.தவுறுகளை சரிப்படுத்திக் கொள்வதில் எந்த அவமானமும் அடையத் தேவையில்லை.
85.நீங்கள் உழைப்பைப் பயன்படுத்துங்கள். அதிகாரம், பதவி போன்றவை தானாகவே தேடிவரும்.
86.இரக்கம் உடைய இதயம், சிந்தனை, ஆற்றல் மிக்க மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய இம்மூன்றும் நமக்குத் தேவை.
87.உனக்கு மன அமைதி வேண்டுமானால் யாருடைய குறையையும் காணாதே
88.அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதனைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் கூறுவதையே பின்பற்றுங்கள்.
89.உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
90.நல்ல மனநிலையில் செய்கின்ற எதுவும் நூறு சதவிகிதம் நேர்த்தியுடன் இருக்கும்.
91.சரியான உற்சாகத்தோடு வேலை செய்யத் தொடங்கினால் வெற்றி நிச்சியம்.
92.செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.
93.எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.