தமிழ் சிந்தனை பழமொழிகள் # 14
Tamil Proverb Quotes(PART 14)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 14
Tamil Proverb Quotes(PART 14)
தமிழ் சிந்தனை பழமொழிகள் # 14
Tamil Proverb Quotes(PART 14)
1. வாழ்க்கை மிக சிறியது. எனவே பல் இருக்கும் வரை சிரித்து வாழ்வோம்.
2. நல்லவனாய் இரு. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்யாதே.
3. உங்களால் பெரிய விஷயங்களை செய்யமுடியவில்லை என்றால் சிறிய விசயங்களை சிறந்த முறையில் செய்து பாருங்கள்
4. நேரத்தைத் தள்ளிப் போடாதே, தாமதத்தால் அபாயமான முடிவே ஏற்படும்
5. முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்.. ஆனால் முயலாமை என்றுமே வெல்லாது..
6. எதுவுமே சுலபமில்லை ஆனால் எல்லாம் சாத்தியம்தான் .
7. குறிப்பிடத்தக்க ஒரு மனிதராக வாழ்வதற்கு நற்பண்புகள் ஒரு படிக்கட்டாகும் .
8. கேட்க வேண்டியது மன்னிப்பு. கேட்கவே கூடாதது கடன்
9. தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான். உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கஷ்டப்படமாட்டான்.
10. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.