மாண்டெயின் சிந்தனை வரிகள் - தமிழ்
Manteyin inspirational quotes in Tamil
மாண்டெயின் சிந்தனை வரிகள் - தமிழ்
Manteyin inspirational quotes in Tamil
மாண்டெயின் சிந்தனை வரிகள்
Manteyin inspirational quotes in Tamil
1.புகழை நோக்கி ஓடாதீர்கள், புகழை நீக்கியும் ஓடாதீர்கள்.
2.நீதியும் நியாயமும் வாதாடும் வக்கீலுக்கு உதட்டிலே தான் அன்பும் சாதூர்யமும் இருக்கின்றன. மனதுக்குள் அன்பும் கருணையும் உள்ளவர்கள் பிறருக்காக வாதாட முடியாது. கண்ணீர் விட்டுக் கதறுவார்கள்.
3.பெண்ணின் மென்கரத்துள் சிக்கிய வீரன், குழந்தையைப் பெற்றுக் கொஞ்சுவதை வீரமாக எண்ணுவானே தவிர, போர்க்களத்தில் வீரனாக வாழ, உயிர் நீக்க அஞ்சுவான்.
4.உடம்பிலே வலுக்குறைந்து பலவீனம் வரும்போது உடமைகளையும் பொறுப்புகளையும் பிள்ளைகளிடம் கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு கொடுக்காது, தானே சுமந்தால் உலகம் சிரிக்கும் பிள்ளைகளும் பெற்றவனை மதிக்கமாட்டார்கள்.
5.வாழ்வில் உன் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டாய், திருப்தியடைந்தாய், விலகிக் கொள். உண்டவன் பந்தியைவிட்டு பசிக்கிறவனுக்கு இடம் கொடுப்பது போன்றது தான் வாழ்வும், சாவும்.
6.போலியும் பொய்யும் நிறைந்த மனிதனுக்கு ஆரம்பத்தில் வெற்றி தோன்றலாம். முடிவில் தோல்வி நிச்சயம்.
7.நல்லவனாக இருந்தால் பிறர் மதிப்பார்கள் புகழ் வரும் என எண்ணுகிறவர்கள் உலகத்திற்கு நன்மை செய்ய முடியாதவர்கள்.
8.யாருக்கு வியாதியைப் பற்றிய பயம் இருக்கிறதோ அவர்களுக்கு வியாதியோடு பயமும் ஒரு வியாதியாகப் பிடித்துக்கொள்ளும்.
9.பிறரிடமுள்ள அழகு, பணம் அறிவைக் கண்டு பொறாமைப்படாதே; அதுவே மனோ வியாதிக்கு வழி வகுக்கும்.
10.ஒருவர் முன்னால் தாண்டிக் குதிக்க வேண்டுமெனறால் அதற்காக சிறிது பின்னால் வந்துதான் ஆக வேண்டும்.
11.ஒழுக்கந்தான் உயர்வானது. பிறர் காணும்போது மட்டுமின்றி, காணாத காலத்தும் யோக்கியமாக வாழ வேண்டும்.
12.தன்னைவிடப் பெரிய சக்தி நன்மை செய்யும் சக்தி உண்டென எண்ணுவதே மனிதனுக்கு முதற் கட்டளையாம். கீழ்ப்படிந்து, தாழ்ந்து நிற்பதின் வழியே எல்லா நற்பண்புகளும் நன்மை தொடர்ந்து சரணடையும்.