மாயா ஏஞ்சலோ சிந்தனை வரிகள் - தமிழ்
Maya Angelo inspirational quotes in Tamil
மாயா ஏஞ்சலோ சிந்தனை வரிகள்
Maya Angelo inspirational quotes in Tamil
1.ஒரு பறவை பாடுவது, அதனிடம் பதில் இருக்கிறது என்பதற்காக அல்ல, அதனிடம் பாடல் இருக்கிறது என்பதற்காகவே.
2.மற்ற அனைத்து குணங்களைவிடவும் மிக முக்கியமானது, துணிவு. ஏனெனில், துணிவு இல்லாமல் மற்ற எந்த குணங்களையும் தொடர்ந்து பின்பற்ற இயலாது.
3.நீங்கள் செயல்படாதவரை எதுவும் தானாக இயங்காது.
4.நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, கற்பியுங்கள்; நீங்கள் அடையும்போது, கொடுத்தளியுங்கள்.
5.நாம் சரியான விஷயங்களை விதைக்கவில்லை என்றால், தவறான விஷயங்களை அறுவடை செய்ய வேண்டியிருக்கும்.
6.உங்களுடைய வெறுப்பினால் நீங்கள் என்னை கொன்று புதைக்கலாம். ஆனால், காற்றைப் போல நான் மீண்டும் எழுந்து வருவேன்.
7.புன்னகைக்காத எவர் மீதும் நான் நம்பிக்கைக் கொண்டதில்லை.
8.வெற்றி என்பது உங்களை நீங்கள் விரும்புவது; நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதனை விரும்புவது; நீங்கள் எப்படி அதனை செய்கிறீர்களோ அதனை விரும்புவது.
9.உங்களுக்கு ஏதாவது பிடிக்கவில்லையெனில், அதனை மாற்றுங்கள். அப்படி மாற்ற இயலவில்லையெனில், உங்கள் மனோபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.
10.எனக்கு நானே நன்மை செய்யாத பட்சத்தில், மற்றவர்கள் எனக்கு நன்மை செய்யவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க இயலும்?