வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 05
Happiness Quotes in Tamil(PART 05)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 05
Happiness Quotes in Tamil(PART 05)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 05
Happiness Quotes in Tamil(PART 05)
1. உன் மனமானது மிகவும் வலிமை வாய்ந்தது. அதை நல்ல எண்ணங்களால் நிரப்பும் போது, உனது வாழ்கை ஆனந்தமாக மாறும்.
2. அடுத்தவர்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படாதே. ஏனெனில்.. நமக்கான வாழ்க்கையை அவர்கள் ஒன்றும் வாழப்போவதில்லை..!
3. யாரையும் அடக்கி வாழும் ஆசையில்லை.. பிறர் குறை சொல்லாதளவுக்கு எனது வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும்..!
4. மவுனமும் சிரிப்பும் மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தைகள்.. மவுனம் நிறைய பிரச்சனைகளை குறைத்துவிடும்.. சிரிப்பு நிறைய பிரச்சனைகளை தீர்த்து விடும்..!
5. இரக்கமும் உறக்கமும் ஒன்றுதான். இரண்டையுமே அளவோடு தான் பயன்படுத்தவேண்டும். அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான். அதிகம் இரக்கம் காட்டுபவன் ஏமாளி ஆகிறான்.
6. நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்கக்கூடாது.. வாழ்ந்து முடித்தபின் நம்மை யாரும் மறக்கக்கூடாது.. அதுதான் நம் வாழ்வின் வெற்றி..!
7. மெதுவாகப் பேசு. அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும் நல்ல எண்ணத்தோடு இரு. அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.
8. தன்னை விட அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே.. என்கிற எண்ணம்தான், எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது..!
9. எல்லா மனிதர்களும் இறக்கிறார்கள்.. ஆனால், உண்மையில் எல்லா மனிதர்களும் வாழ்வதில்லை..!
10. வாழ்க்கையில் நிம்மதி வேணும்னா ரெண்டு பேரை கண்டுக்கவே கூடாது.. 1.நமக்குப் பிடிக்காதவங்க! 2.நம்மைப் பிடிக்காதவங்க!