திரு வி க சிந்தனை வரிகள் – தமிழ் #01
ThiruVK inspirational quotes in Tamil(PART 01)
திரு வி க சிந்தனை வரிகள் – தமிழ் #01
திரு வி க சிந்தனை வரிகள் – தமிழ் #01
ThiruVK inspirational quotes in Tamil(PART 01)
1.ஒழுக்கம் உடையவனின் முகத்தில் அழகு தெய்வம் குடியிருக்கும்.
2.கடவுள் நம்பிக்கை இல்லாத மனிதன் விலங்கு நிலைக்கு ஆளாவான்.
3.பெற்றவளே கண் கண்ட தெய்வம். தாயிடம் அன்பு காட்டாதவன் கடவுளின் அருளைப் பெற முடியாது.
4.யாரிடமும் உயர்வு, தாழ்வுடன் பழகக்கூடாது. எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.
5.பெண்ணின் ஆபரணம் கற்பு. அதைக் காப்பது தலையாய கடமை.
6.பணக்காரர்கள் ஏழைகளைத் துன்புறுத்தக் கூடாது.
7.பெற்ற தாயை மதித்து போற்றுங்கள். தாயின் உள்ளத்தில் இல்லாத கடவுள் வேறெங்கும் இருக்க முடியாது.
8.வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் பயிலும் கல்வி வேர் போல துணைநிற்கிறது.
9.கடவுள் அளித்த அரிய கொடை இந்த உடல். அதை நல்வழியில் பயன்படுத்துவது நம் கடமை.
10.ஒழுக்கமுள்ளவனிடம் எல்லா அழகுணர்வும் நிறைந்து வாழ்வு ஒளி பொருந்தியிருக்கும்.