திருவள்ளுவர் சிந்தனை வரிகள் – தமிழ்
Thiruvaluvar inspirational quotes in Tamil
திருவள்ளுவர் சிந்தனை வரிகள் – தமிழ்
Thiruvaluvar inspirational quotes in Tamil
திருவள்ளுவர் சிந்தனை வரிகள் – தமிழ்
Thiruvaluvar inspirational quotes in Tamil
1.நடுநிலையுடன் வாழும் ஒருவன் செல்வநிலையில் தாழ்வுநிலை அடைந்தாலும், அத்தாழ்வினை நல்லோர்கள் தாழ்வாக எண்ண மாட்டார்கள். கெட்டாலும் மேன்மக்களாகவே கருதுவர்.
2.ஒழுக்க நெறியில் இருந்து விலகினால் ஒருவன் என்றுமே நீங்காத பெரும்பழியைச் சுமக்க வேண்டி வரும். ஆனால், ஒழுக்கத்தினைப் பின்பற்றுபவன் வாழ்வில் என்றும் மிக மேன்மைகளை அடைவான்.
3.பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யப்பட்ட உதவி, அளவில் சிறியதாயினும் செய்தவரின் பண்புநலன்களை ஆராய்ந்து பார்த்தால் அவ்வுதவியின் பெருமை கடலைவிடப் பெரியதாக அமையும்.
4.நெஞ்சில் கருணை இருந்தால் ஒழிய கடவுளின் அருளுக்கு யாரும் பாத்திரமாக முடியாது.
5.அறிவின் வடிவமாகத் திகழும் கடவுளின் திருவடியை வணங்குவதே கல்வி பெற்றதன் பயனாகும்.
6.இறைவனை வணங்குகிறவர்களை நன்மையோ, தீமையோ பாதிக்காது, துன்பம் என்ற கடலைச் சுலபமாக நீந்திக் கரை ஏறுவர்.
7.இன்பம், துன்பம், கலந்தது தான் வாழ்க்கை. ஆனால், தன் தூய்மையான மனதை இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டால் துன்பம் இல்லை.
8.உழைக்க உறுதி கொண்டவன் எதிலும் வெற்றி பெறுகின்றான். பொது வாழ்விலும் தனிமனித வாழ்விற்கும் உழைப்பே உயர்வு தரும். சோம்பல் ஒருவனை நரகத்திற்குத் தான் கொண்டு போய்ச் சேர்க்கும்.
9.எவ்வளவு கிடைத்தாலும் அடங்காத தன்மையுள்ள ஆசையை ஒருவன் அடக்கப் பழகி விட்டால், அப்போதே அவன் பிறப்பில்லாத பேரின்ப நிலையைப் பெறுகிறான்.
10.ஒழுக்கத்தினால் சிறப்பு உண்டாவதால் ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை உயிராக மதித்துப் போற்றி மதிப்பார்கள்.
11.தக்க சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும், பயன் கருதாமல் செய்யும்போது அதன் மதிப்பு இந்த உலகத்தை விட பெரியது.
12.நெறிமுறைகளைப் பின்பற்றி நல்ல முறையில் வாழ்பவன் கடவுள் நிலையில் வைத்து வணங்கப்படுவான்.
13.அன்பை யாராலும் மறைக்க முடியாது. வேண்டியவர்களின் துன்பத்தைக் கண்டவுடன், அது தானாக வெளிப்பட்டு விடும்.
14.சொல்வது யாருக்கும் எளிதான விஷயம். சொன்ன வாக்கை காப்பாற்றுவது அரிதானது.