ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #01
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 01)
ஏ பி ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #01
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 01)
ஏ. பி. ஜே அப்துல் காலம் சிந்தனை வரிகள் – தமிழ் #01
APJ Abdul Kalam inspirational quotes in Tamil (PART 01)
1.நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்,உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
2.சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.
3.நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
4.பிரச்சனையை சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு சமாளியுங்கள்.
5.வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சனைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண முடியும்.
6.எந்த அளவிற்கு உங்களுடைய அறிவுத்திறனால் தற்போதைய நிலவரம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!
7.வெற்றிகரமான சாதனைகளுக்கு நான்கு அடிப்படை அம்சங்கள் அவசியம். அவை இலக்கு நிர்ணயம்; ஆக்கபூர்வமான சிந்தனை; கற்பனைக் கண்ணோட்டம்; நம்பிக்கை என நான்காகும்.
8.கனவு காணுங்கள், திட்டமிடுங்கள், செயற்படுங்கள்.
9.உன் கைரேகையை பார்த்து எதிர் காலத்தை நிர்ணயித்து விடாதே.
ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
10.நமது ஆரோக்கியத்திற்கு கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வு பூர்வ சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும் என்பதை நாம் உணர வேண்டும்!