கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Kannadasan inspirational quotes in Tamil(PART 02)
கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Kannadasan inspirational quotes in Tamil(PART 02)
கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Kannadasan inspirational quotes in Tamil(PART 02)
12.நல்லவன் படகில் போகும்போது துடுப்பு தண்ணீருக்குள் மூழ்கிவிட்டால் நதியே திசை மாறி அவன் சேர வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.
13.வெற்றிக்கும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான் .. கடமையைச் செய்தால் வெற்றி.. கடமைக்கு செய்தால் தோல்வி..
14.நாம் விரும்பி பிறக்காதது போல நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவை அல்ல.
15.இருப்பது போதும் வருவது வரட்டும் போவது போகட்டும் மிஞ்சுவது மிஞ்சட்டும் என்ற சலனங்களுக்கு ஆட்படாமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
16.இன்னதுதான் இப்படித்தான் என்பதெல்லாம் பொய்க்கணக்கு.. இறைவனிடம் உள்ளதடா எப்போது உன்வழக்கு..
17.நிரந்தரமானது துன்பம்; வந்து போவது இன்பம்; இதுதான் வாழ்க்கை என்பதை தெளிவாக கண்டுகொண்டு விடவேண்டும்.
18.செய்த வினையும், செய்கின்ற தீவினையும் ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டாது.
19.அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.
20.குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது.
21.சொர்க்கம் என்று நரகத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன் பிறகுதான் தெரிந்தது அங்கே பளபளப்பானவை எல்லாம் பாம்புகள் என்று ..
22.வெற்றிக்காக போராடும்போது வீண்முயற்சி என்றவர்கள் வெற்றி பெற்ற பின் விடாமுயற்சி என்பார்கள்.