பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Bharathiyar inspirational quotes in Tamil(PART 03)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Bharathiyar inspirational quotes in Tamil(PART 03)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Bharathiyar inspirational quotes in Tamil(PART 03)
21.தெய்வம் விட்டது நல்வழி என்று எப்போதும் நினையுங்கள். ஆற்றில் மிதக்கும் கட்டை போல மனதை இலகுவாக வைத்திருங்கள்.
22.துன்பம் நேரும் சமயத்தில் அதைக் கண்டு சிரிக்கப் பழகுங்கள். அதுவே அத்துன்பத்தை வெட்டும் வாளாகி விடும்.
23.தெய்வத்தை கும்பிட்டாலும், கும்பிடாவிட்டாலும் யாரையும் ஏமாற்றாமல் வாழ்ந்தாலே போதும். தெய்வத்தின் அருள் உண்டாகும்.
24.வீட்டிலும்,வெளியிலும் எங்கும் எப்போதும் மனிதன் நேர்மையைப் பின்பற்றி வாழ வேண்டும்.
25.கல்வி அளிப்பதோடு குழந்தைகளின் உடல்நலனுக்கான விளையாட்டுப் பயிற்சிகளையும் அளிப்பது அவசியம்.
26.பிறருக்கு உதவி செய்வது நல்லது. அதிலும் ஏழைக்குழந்தையின் கல்விக்கு உதவுவது மிகவும் நல்லது.
27.உங்களை நீங்களே திருத்திக் கொள்ள தயங்காதீர்கள். திருந்தி விட்டால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.
28.உள்ளத்தில் கர்வம் நுழைந்து விட்டால், தர்மத்தின் பிடியில் இருந்து மனிதன் நழுவி விடுவான்.
29.சென்றதை சிந்திப்பதை விட, இனிமேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.
30.தன்னை விட பலவீனமானவனுக்கு அநியாயம் செய்தால் தப்பில்லை என்று ஒருவன் நினைக்கும் வரை கலியுகம் இருக்கும்.