பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Bharathiyar inspirational quotes in Tamil(PART 04)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Bharathiyar inspirational quotes in Tamil(PART 04)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Bharathiyar inspirational quotes in Tamil(PART 04)
31.மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை. பயம் என்னும் பெயரில் மனதிற்குள்ளேயே இருக்கிறது.
32.நம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.
33.கண்ணைத் திறந்து குழியில் விழுவது போல, மனிதன் நல்லதை அறிந்தும் தீமையை விட முடியாமல் தவிக்கிறான்.
34.பேச்சு ஒரு விதமாகவும், செயல் வேறுவிதமாகவும் நடப்போரின் உறவைக் கனவிலும் நினைக்கவே கூடாது.
35.தெளிந்த அறிவும்,இடைவிடாத முயற்சியும் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் தொட்டதெல்லாம் துலங்கும்.
36.மற்றவர் உள்ளத்தில் உங்களைப் பற்றிய தவறான மதிப்பு உண்டாவதற்கு ஒருபோதும் இடம் அளித்து விடாதீர்கள்.
37.மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்குச் சமமாகும்.
38.பெரிய பெரிய கஷ்டங்கள் பட்ட பிறகு தான் சிறிய உண்மைகள் புரிய ஆரம்பிக்கின்றன.
39.தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. உனக்கு எதிலும் வெற்றியே உண்டாகும்.
40.கடமையைச் செய்யாமல் சோம்பேறித்தனமாக இருப்பவனைக் காண்பது நமக்கு தீமையையே உண்டாக்கும்.