பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Bharathiyar inspirational quotes in Tamil(PART 05)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Bharathiyar inspirational quotes in Tamil(PART 05)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Bharathiyar inspirational quotes in Tamil(PART 05)
41.கொடுத்த வேலையைச் செய்யாமல் ஆதாயம் பெற முயல்பவன் பிச்சைக்காரனை விட கேவலமானவன்.
42.பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாத நல்லவர்களிடம் மட்டுமே இருக்கும்.
43.பழி வாங்கும் எண்ணத்துடன் பிறருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
44.மனித முயற்சியில் தவறு ஏற்படுவது இயல்பே. ஆனால் அதை திருத்திக் கொள்வதே மனிதனுக்கு அழகு.
45.அதர்மம் இருந்தால் தர்மத்தின் அருமை புரியும். அதனால்
தர்மம் இருக்கும் வரை உலகில் அதர்மமும் இருந்தே தீரும்.
46.எரியும் விளக்கு இருந்தாலும் அதைக் காண கண்கள் வேண்டும். அதுபோல உதவி செய்ய பலர் உடனிருந்தாலும் சுயபுத்தி இருப்பது அவசியம்.
47.எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவது நம் கடமை.
48.எந்த தொழிலையும் முடியாது என்று கைவிடாதே. திறமையுள்ளவனிடம் பணியாளனாக இருந்தாவது அந்த தொழிலைக் கற்றுக் கொள்.
49.பிறருடைய பொருளை அபகரிக்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும் கூட பாவம் தான்.
50.உழைத்து வாழ்வது தான் சுகம். வறுமை, நோய் போன்றவை உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.