வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 04
Happiness Quotes in Tamil(PART 04)
வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான தமிழ் சிந்தனை வரிகள் # 04
Happiness Quotes in Tamil(PART 04)
Happiness Quotes in Tamil(PART 04)
1. வாழ்க்கை மிகச் சிறியது.. அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்..!
2. lifeisnowhere இதை எப்படி படித்தீர்கள்..? life is no where என்றா? life is now here என்றா? நாம் பார்க்கிற விதத்தில் தான் வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த ஒற்றை வரி உணர்த்துகிறது..!
3. உங்கள் சோகங்களை மணலில் எழுதுங்கள் மறைந்து போகட்டும். உங்கள் மகிழ்ச்சியை கல்லில் செதுக்குங்கள் என்றும் நிலைத்திருக்கும்.
4. யாருக்காக வாழுறோம்னு யாருக்கும் தெரியாது. ஆனா.. நம்ம கூட யார் இருக்காங்களோ அவங்கள சந்தோசமா பார்த்துக்கணும். அவ்வளவே வாழ்க்கை..!
5. பணம் சம்பாதிக்க நல்லவன், கெட்டவன் எல்லோராலும் முடியும்.. மனிதர்களை சம்பாதிக்க நல்ல மனசுள்ள மனிதனால் மட்டும்தான் முடியும்.
6. வாழ்க்கை எளிதாகிவிடும் மன்னிப்பை கேட்பதற்கும், கொடுப்பதற்கும் நாம் கற்று கொண்டால்..
7. எந்த பெண்ணும் அவள் கணவனுக்கு ராணியாக இல்லாமல் இருக்கலாம்.. ஆனால் நிச்சயம் அவள் தந்தைக்கு இளவரசியாகவே இருக்கிறாள்...
8. உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் நீ இன்னொரு பிறவியில் என்னைப் பெற்றால் இன்னும் ஆனந்தம்
9. நேசிப்பவர்களை பாராட்டு தேவைப்படுபவர்களுக்கு உதவு காயப்படுத்துபவர்களை மன்னித்து விடு விலகியவர்களை.. மறந்தே விடு...!
10. ஆனந்தமான வாழ்க்கை வாழ ஆடம்பரம் தேவை இல்லை, அன்பானவர்கள் நம்முடன் இருந்தாலே போதும்..