பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Bharathiyar inspirational quotes in Tamil(PART 06)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Bharathiyar inspirational quotes in Tamil(PART 06)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #06
Bharathiyar inspirational quotes in Tamil(PART 06)
51.பொய்யான நடிப்பையும், முகஸ்துதியாக பேசுவதையும் பொருட்படுத்தக் கூடாது. ஆனால், இப்படிப்பட்டவர்களையே தலையில் தூக்கி வைத்து உலகம் கொண்டாடுகிறது.
52.சோம்பலை புறக்கணியுங்கள். உழைப்பின்றி உலகில் எதையும் சாதிக்க முடியாது.
53.உடல் பலமுடன் இருக்க விரும்பினால், முதலில் மனதை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள்.
54.உழைப்பதில் தான் உண்மையான சுகம் இருக்கிறது. வறுமை, நோய் போன்ற குட்டிப் பேய்கள் எல்லாம் உழைப்பைக் கண்டால் ஓடி விடும்.
55.குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி. அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
56.தைரியம் என்ற சொல்லுக்கு அறிவு, துணிவு என்னும் இரு அர்த்தம் உண்டு.
57.ஒரு மனிதன் தனக்குத் தானே நண்பனாகி விட்டால், உலகமே அவனுக்கு நட்பாக மாறி விடும்.
58.மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால், வாழ்வில் உயர்வு அடைவது உறுதி.
59.எல்லா சாஸ்திரமும் ஒரே உண்மையை போதித்தாலும், எல்லாருக்கும் ஒரே சாஸ்திரம் ஒத்து வருவதில்லை.
60.எந்த செயலுக்கும் காலம் ஒத்துழைக்காவிட்டால், அதனை நிறைவேற்றுதல் என்பது சாத்தியமாகாது.