கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Kannadasan inspirational quotes in Tamil(PART 05)
கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Kannadasan inspirational quotes in Tamil(PART 05)
கண்ணதாசன் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Kannadasan inspirational quotes in Tamil(PART 05)
45.காலம் போனால் திரும்புவதில்லை.. காசுகள் உயிரை காப்பதும் இல்லை !
46.கட்டுக்காவல் எங்கே பலமாக இருக்கிறதோ, அங்கே தான் தாண்டி குதிக்கும் கால்களும் உறுதியாக இருக்கின்றன.
47.ஒன்று தவிர்க்க முடியாது என்னும் போது, அதை எதிர்கொள்ளும் தைரியம் வந்துதானே தீர வேண்டும்.
48.சித்தாந்தம் தோற்றுப்போன இடத்தில் வேதாந்தம் தானே கை கொடுக்கிறது?
49.கோடையில் குளம் வற்றிவிட்டதே என்று கொக்கு கவலைப்படக் கூடாது, மீண்டும் மழை காலம் வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டதென்று நதி குதிக்கக் கூடாது, அதோ.. வெயில்காலம் வந்து கொண்டிருக்கிறது.
50.எதை வெட்டிவிட்டால் அடுத்த கேள்வி இருக்காதோ, அதை வெட்டிவிடுபவனே அறிவாளி.
51.உலகத்தில் தப்பு என்று சில விஷயங்களைக் கருதுகிறோம். ஆனால், அவை நிதானமாகவும், முறையாகவும் நடக்கும்போது அவையே நியாயங்களாகி விடுகின்றன.
52.ஊரிலே சாக்கடை என்பது மோசமான பகுதி தான், ஆனால் அப்படியொன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகி விடாதா?
53.அறிமுகமில்லாதவர்கள் இருக்கின்ற இடத்தில், தவறான விஷயங்கள் நியாயமாகிவிடும்!
54.ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம். அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்.