காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #09
Best Love Quotes in Tamil (PART 09)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #09
Best Love Quotes in Tamil (PART 09)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #09
Best Love Quotes in Tamil (PART 09)
1. பிறரால் பாதிக்கப்பட்டவர்களை விட.. பிடித்தவர்களால் பாதிக்கப்படுபவர்களே அதிகம்...!
2. அவ அப்படித்தான் என்று கணவனும் அவரு அப்படித்தான் என்று மனைவியும் புரிந்து கொண்டிருப்பதே உண்மையான காதல்
3. எனக்கு வலிக்கும் என தெரிந்த பிறகும், வலி தர உன்னால் முடியும் என்றால்.. வலிக்காத மாதிரி நடிக்க என்னாலும் முடியும்.
4. கண்கள் திறக்கும்வரை தான் கனவு நீடிக்கும்.. ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்.
5. உன்னை நினைக்க வேண்டாம் என்று என் மனம் சொல்கிறது.. ஆனால் அந்த மனது தான் எப்போதும் உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது..!
6. என்றோ தொலைத்த உன்னை இன்று அருகாமையில் தேடுகிறது என் இதயம்
7. புரிந்து கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும்.. புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தெரியும்..!
8. காதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் காதலித்துவிட்டு, அதை புரிந்து கொள்ள நினைக்கையில்தான் வாழ்வில் மரண வலிகளை உணர்கின்றோம்..
9. உண்மையான அன்பை சுமக்கும் இதயம் அடிக்கடி ஏமாற்றம் அடையலாம். ஆனால் யாரையும் ஏமாற்றாது...!
10. நம் மனதுக்கு காரணமே இல்லாமல் சிலரை மிகவும் பிடித்து விடுகிறது.. ஆனால் அவர்களுக்கோ, நம்மை பிடிப்பதும் இல்லை நம்முடைய அன்பு புரிவதும் இல்லை.!