காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #18
Best Love Quotes in Tamil (PART 18)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #18
Best Love Quotes in Tamil (PART 18)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #18
Best Love Quotes in Tamil (PART 18)
1. பாசம் வையுங்கள் தவறில்லை.. ஆனால், பைத்தியமாக ஆகிவிடாதீர்கள்.. ஏனெனில்.. இங்கு முடிவே இல்லாத வாழ்வும் இல்லை.. பிரிவே இல்லாத உறவும் இல்லை.. எல்லாம் சில காலம் தான்..
2. முற்றுபுள்ளி தொடர் புள்ளி ஆனது.. என் காதலுக்கு வைத்தாள் முற்றுபுள்ளி. என் கவிதைக்கு வைத்தாள் தொடர்புள்ளி..
3. சண்டை போட்டுவிட்டு மறு நாள் எதுவும் நடக்காதது போல் பேசும் அன்பு கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கமே..
4. உன்னை எதிரில் பார்த்த நாட்களை விட எதிர் பார்த்த நாட்களே அதிகம்.. இன்னும் உன்னை எதிர் பார்க்கின்றேன் எதிரில் பார்க்க..
5. யார் கூட பேசினா மனசு சந்தோஷப்படுமோ அவங்க கூட தான் பேச முடியாமல் செய்துவிடுகிறது விதி.
6. உன்னை மட்டும் நரகத்திற்கு அனுப்ப வேண்டும்.. உன்னை தவிர யாரால் முடியும் நரகத்தை சொர்க்கமாக்க..
7. நினைத்து கூட பார்க்கவில்லை நீ கிடைப்பாய் என்று.. கிடைத்தவுடன் நினைத்துவிட்டேன் நானும் அதிர்ஷ்டசாலி என்று..!
8. உன்னுடன் வாழ பிறந்தவன் அல்ல நான்.. உனக்காகவே வாழ பிறந்தவன்..
9. இறுதிவரை உன்னுடன் இருப்பேன்.. உனக்கே தெரியாமல் உனக்காக..
10. காதல் என்பது கண்களில் தோன்றி கனவில் முடிவதல்ல.. அது மனதில் தோன்றி மரணம் வரை நீடிப்பது..!