காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #19
Best Love Quotes in Tamil (PART 19)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #19
Best Love Quotes in Tamil (PART 19)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #19
Best Love Quotes in Tamil (PART 19)
1. ஆயிரம் ஆசைகள் அத்தனையும் நிறைவேற்ற ஆயிரம் ஆண்டுகளும் போதாது.. அதனால் தான் சாகா வரம் கேட்கிறேன்... உன்னோடு வாழ மட்டும்...
2. கண்களால் பார்க்க முடியாத விஷயங்களை, இதயம் பார்க்கும் எனில் அதுதான் காதல்...
3. உன்னை விட என் மீது அதிகம் அன்பு வைக்க எவரும் இல்லை.. அதனாலேயே.. உன்னை கெஞ்சிக் கேட்கிறேன் என்னை காதலி என்று...
4. விலகி போக நினைப்பவர்களை விளக்கம் கேட்டு தடுக்காதே புரிந்து கொள்ளாத மனிதர்கள் பிரிந்து போவதே மேல்..
5. ஒரு நிமிடம் போதும் அதிகம் நேசிப்பதற்கு... ஒரு நிமிடம் போதும் சண்டை போட்டு பிரிவதற்கு... ஆனால், ஒரு ஜென்மம் போதாது நேசித்த ஒருவரை மறப்பதற்கு...
6. பிடித்தவர்களுடன் நாம் சண்டைப் போடுவது அவர்களைவிட்டு பிரிவதற்காக இல்லை.. பிரிந்துவிட கூடாது என்பதற்காக தான்..
7. சொல்லச் சொல்ல... புரியும் அன்பை விட, காலம் செல்லச் செல்ல... ஒவ்வொரு தருணங்களிலும் உணரும் அன்பே நிறைவானது...
8. நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ... அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கின்றாய் என்பது...
9. இதுவரை எங்கிருந்தாய்? இதயமும் உன்னை கேட்கிறதே... பெண்னே எங்கே மறைந்திருந்தாய்? என்னுள் எப்படி நுழைந்துக் கொண்டாய்...?
10. பேசவவே கூடாது என முடிவு எடுத்த பின்பும், வலிகள் மறந்து, கோபங்கள் மறந்து.. பேச வைப்பது தான் உண்மையான அன்பு...!