காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #21
Best Love Quotes in Tamil (PART 21)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #21
Best Love Quotes in Tamil (PART 21)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #21
Best Love Quotes in Tamil (PART 21)
1. முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு இல்லாமல் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.. அதிக அன்போடு இருந்தாலும் கிடைத்துவிடும்..!!
2. துன்பங்களை வளர்ப்பதும் தனிமை தான் ; தணிப்பதும் தனிமை தான்.
3. உறவை நேசிப்பதை விட உள்ளத்தை நேசித்துப் பார்.. நீ நேசிக்கும் உள்ளம் கோபம் கொண்டாலும் சுகமாகத் தோன்றும்.
4. நீ பேசு அல்லது உன் அழகு பேசட்டும் இருவரும் பேசினால் நான் எப்படிக் கேட்பது..!
5. வாழ்க்கை சுகம் தான் நான் தோள் சாய்க்க அவளும், அவள் தலை சாய்க்க நானும், ஒன்றாய் இருந்தால்.
6. அழுகையை நிறுத்தி சிரிக்க வைக்க முடியுமென்றால், அது உண்மையாய் நேசிப்பவர்களால் மட்டுமே சாத்தியமாகும்..!!
7. அளவிற்கு அதிகமான அன்பு முதலில் பிரமிக்கப்பட்டு... பின் ரசிக்கப்பட்டு.. தொல்லையாகி சலிக்கப்பட்டு இறுதியில் உதாசினப்படுத்தப்படுகிறது.
8. அன்பு நிறைந்த உள்ளம்தான் சண்டை போடும் விலக அல்ல விலகிடக் கூடாது என்பதற்காக...
9. எல்லா ஆண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை தனக்காக கண்ணீர் சிந்துமளவிற்க்கு ஒரு பெண்ணின் உண்மையான "அன்பு"..!
10. தனிமை.. நானாக தேடிக்கொண்ட சாபம் இல்லை.. நான் உயிராய் நேசித்தவர்கள் எனக்கு அள்ளித்தந்த வரம்..!