காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #22
Best Love Quotes in Tamil (PART 22)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #22
Best Love Quotes in Tamil (PART 22)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #22
Best Love Quotes in Tamil (PART 22)
1. ஒரு ஆணின் உண்மையான அன்பை ஒரு பெண் உணர்ந்துவிட்டால் அவள் அவனிடம் எதையும் மறைப்பதும் இல்லை, மறுப்பதும் இல்லை..!!
2. அழகான பெண்களுக்கெல்லாம் திமிர் இருக்குமென்றாலும் உனக்கிருக்கும் அழகே உன் திமிர் தான்..
3. கண்கள் செய்த சிறிய தவறுக்காக இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை காதல்
4. இந்த உலகில் யாரும் யாருக்காகவும் இல்லை.. என்பதை புரிந்துகொண்டாலே.. வீண் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும் குறைந்து விடும்..!
5. எவ்வளவு அன்போடு அணைத்தாலும் கத்திக்கு வெட்டத்தான் தெரியும், அது போலத்தான் சில உறவுகளும்.. நாம் எவ்வளவுதான் அன்பாக இருந்தாலும் காயப்படுத்தி விடுவார்கள்..!
6. உண்மையான அன்பில்தான் கோபங்களும் கட்டுப்பாடுகளும் அதிகம்... இதை புரிந்துகொண்டவர்களை விட பிரிந்து சென்றவர்களே அதிகம்...!
7. வார்த்தைகள் நம்முடையது என்பதற்காக மனதில் தோன்றுவதையெல்லாம் பேசாதீர்கள்.. சிலர் புரிந்து கொள்வார்கள்.! சிலர் பிரிந்து செல்வார்கள்.!!
8. நம் கோபங்களின் அர்த்தம் புரியாதவர்களுக்கு, நம் பாசத்தின் ஆழம் புரியாது.. அவர்களிடம் கோபத்தை காட்டுவதும் வீண்.. பாசத்தை எதிர்ப்பார்ப்பதும் வீண்..
9. நமது உடலில் ஒரு சதவிதம் தண்ணீர் குறைந்தாலும் உடனே நம் நாக்கு வறண்டு போகும் உன் மீதான காதலில் அரை சதவிதம் குறைந்தாலும் உடனே என் உயிர் வறண்டு போகும்..!
10. பகலை விட இரவில் மேகங்கள் மெதுவாகவே நகர்கின்றன நீ தூங்கும்போது பூமியே மெதுவாகச் சுற்றும்போது மேகம் மட்டும் என்ன செய்யும்...!