காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #28
Best Love Quotes in Tamil (PART 28)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #28
Best Love Quotes in Tamil (PART 28)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #28
Best Love Quotes in Tamil (PART 28)
1. தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு முத்தம் தராதே அது உன் முத்தத்தை எடுத்து கொண்டு வெறும் சத்தத்தை மட்டுமே எனக்கு தருகிறது.
2. மழையில் நான் நனையாமல் இருக்க, குடை விரித்தாய்.. நனையத் தொடங்கியது என் இதயம்..!
3. கரையில் நின்றிருந்த உன்னைப் பார்த்ததும் கத்திவிட்டன கடல் அலைகள்... 'கோடான கோடி ஆண்டுகள் எம்பி எம்பிக் குதித்து கடைசியில் பறித்தே விட்டோமா நிலவை!' என்று.
4. காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே சொல்லாமலே ஓடி போனாலே
5. ஒரு மழைத்துளி சிப்பிக்குள் நுழைந்தால் முத்தாக மாற பல காலம் ஆகிறது உன் கன்னத்தில் விழுந்தால் விழுந்த நொடியிலேயே முத்தாகி விடுகிறது.
6. காதல் ஒருவனை கவிதை எழுத வைக்கும் என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், நான் காதலித்தபோது தான் அது உண்மை என புரிந்து கொண்டேன்..!
7. பெண்ணே! உனக்கு என்னை பிடிக்காமல் போனாலும் போகலாம் ஆனால், என்னுடைய கவிதைகளை நிச்சயம் பிடிக்கும் ஏனெனில் அவை உன்னை பற்றியவை..!
8. பெண் அழகென்று எல்லோருக்கும் தெரியும் ஆனால், ஒரு ஆண் எவ்வளவு அழகென்று அவனை ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு மட்டுமே தெரியும்
9. காதலைப் போல் மிகச் சிறந்த பரிசும் இல்லை.. மிக மோசமான தண்டனையும் இல்லை..!!
10. காதல் ஒரு அழகான உயிர்.. பலரிடம் வந்தாலும் சிலரிடமே வாழ ஆசைப்படுகிறது..!!