காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #30
Best Love Quotes in Tamil (PART 30)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #30
Best Love Quotes in Tamil (PART 30)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #30
Best Love Quotes in Tamil (PART 30)
1. வட்டிக்கு வைத்த நகையைக்கூட திருப்பி விடலாம் உன் மீது வைத்த கண்களைத்தான் திருப்பவே முடிவதில்லை.
2. நீ வேண்டும் என்பதைத் தவிர வேறெந்த வேண்டுதலும் இல்லை எனக்கு!
3. என்னைப் பார்த்து யார் நீ? என்று கேட்டுவிடாதே! எனக்கு உன்னை மட்டும்தான் தெரியும்.. என்னைத் தெரியாது.
4. நீ தூங்கும் அழகைப் பார்த்துதான் காற்றாடிக்குக் கிறுக்குப் பிடித்துத் தலை சுற்றுகிறது
5. உன்னை போன்று அழகான கைரேகை இல்லாதவர்கள் மருதாணி இட்டுக்கொள்கிறார்கள்
6. பொம்மையை நீ கொஞ்சாதே அதற்கு உயிர் வந்துவிட்டால் யார் வளர்ப்பது..!
7. வானத்தில் மேகமூட்டம் மழை வருவது போல் இருக்கிறது தூரத்தில் ரோஜாத் தோட்டம் நீ வருவதுபோல் இருக்கிறது
8. ஒரு கவிதை புத்தகத்தின் பக்கம் திருப்பப்படுகிறது நீ கண்களை மூடித் திறக்கும்போது.
9. உன்னைக் கடித்த எறும்புகளெல்லாம் 'தேவதையைக் கடித்த எறும்புகள் சங்கம்' என்று ஒரு சங்கம் வைத்திருக்கிறதாமே..!
10. நாம் யார் ஒருவரின் அன்புக்காக ஏங்குகிறோமோ...! அவர்களே நம்மை அதிகம் காயப்படுத்துகிறார்கள்.