காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #32
Best Love Quotes in Tamil (PART 32)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #32
Best Love Quotes in Tamil (PART 32)
காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் #32
Best Love Quotes in Tamil (PART 32)
1. நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம் என்று சந்தோஷப்படுவதா.. இல்லை கடைசிவரை நண்பர்களாகவே இருப்போம் என்று வருத்தப்படுவதா என தெரியவில்லை.
2. எனக்கு தினமும் பிறந்தநாள் தான் ஒவ்வொரு நாளும் உன் கண்ணக்குழியில் இறந்து போவதால்...
3. நீ காதலிப்பவள் அழகாக இருப்பதை விட, உன் வாழ்கையை அழகாக்குபவளாக இருக்க வேண்டும்.
4. ஒரு வார்த்தையில் உயிர் விடுவதும், ஒரு வார்த்தைக்காக உயிர் விடுவதும் உண்மையான காதலினால் மட்டுமே நடக்கும்..!!
5. எந்த இடத்தில் அன்பு முன் வைக்கப்படுகிறதோ அந்த இடத்தில் அழகு பின் நோக்கி தள்ளப்படுகிறது.. அது தான் உண்மையான காதல்...!!
6. என்னை பார்க்காமல் பூக்கும் பூக்கள் ஆயிரம் உண்டு.. ஆனால், என்னை பார்த்தவுடன் பூக்கும் பூக்கள் உன்னிடம் மட்டுமே உண்டு..!
7. உன்னை பார்த்த அந்த முதல் நொடியும் உன்னை விட்டு பிரிந்த அந்த கடைசி நிமிடமும் ஒட்டிக்கொண்டது என் நினைவில்..
8. எப்போதும் நினைவுக்கு வருவதால் மறக்க நினைக்கிறேன்.. மறக்க நினைப்பதால் எப்போதும் நினைவில் இருக்கிறாய்...
9. அதிக கோபம் கொண்டதும், அதை விட அதிக பாசம் கொண்டதும் உன்னிடம் மட்டுமே..
10. விரும்பியபோது விரும்பினேன் என்பதை விட, வெறுத்தபோதும் விரும்பினேன் என்பதே உண்மை..!!