ஷிவ் கெரா சிந்தனை வரிகள்
Shiv Gera inspirational quotes in Tamil
ஷிவ் கெரா சிந்தனை வரிகள்
Shiv Gera inspirational quotes in Tamil
ஷிவ் கெரா சிந்தனை வரிகள்
Shiv Gera inspirational quotes in Tamil
1.தனது ஒழுக்கத் தன்மையை இழந்து விட்ட எந்தவொரு சமுதாயமும் அழிவை நோக்கியே செல்கிறது. ஏனென்றால், எல்லாத் தோல்விகளுமே ஒழுக்கமின்மையால் எற்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.
2.கற்பது என்பது உணவு உண்பது போன்றது. நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது ஒரு பெரிய விஷயமில்லை. நீங்கள் எவ்வளவு ஜீரணிக்கிறீர்கள் என்பதே முக்கியம்.
3.நீங்கள் ஒரு உயர்ந்த சுய மதிப்பினை விரைவாக வளர்த்துக் கொள்ள விரும்பினால், முதலில் உங்களுக்கு எந்த வகையிலும் பிரதிபலன் செய்ய முடியாதவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.
4.வாய்ப்புகள் தடைகளைப்போல மாறுவேடம் போட்டுக் கொண்டு வரும். ஆகவேதான் பெரும்பாலான மக்கள் அவற்றை உணருவதில்லை. பெரிதாகத் தடை இருக்குமானால் வாய்ப்பும் பெரியதாக இருக்கும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.
5.வெற்றியும், சந்தோஷமும் ஒன்றாக இணைந்தே இருக்கும். நீங்கள் விரும்புவதை அடைவது வெற்றியாகும். நீங்கள் அடைந்ததை விரும்புவது சந்தோஷமாகும்.
6.வெற்றியாளர்கள் ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாகவே நினைத்து வேலை செய்கிறார்கள். ஏனெனில் எதாவது ஒருநாள் கடைசி நாளாக இருக்கப் போகிறது; அந்த நாள் எது என்பதை நாம் அறியமாட்டோம். அவர்கள் இறக்கும்போது வெற்றியாளர்களாகவே இறக்கிறார்கள்.
7.வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை
எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்து அவை துன்பமாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.
8.வெற்றி பெறுபவர்கள் எப்போதும் மிகச் சிறந்த காரியங்களைச் செய்வதில்லை. அவர்கள் சாதாரண வேலையைக் கூட மிகச் சிறந்த முறையில் செய்கின்றனர்.