இங்கர்சால் சிந்தனை வரிகள் – தமிழ்
Ingersoll inspirational quotes in Tamil
இங்கர்சால் சிந்தனை வரிகள் – தமிழ்
Ingersoll inspirational quotes in Tamil
இங்கர்சால் சிந்தனை வரிகள் – தமிழ்
Ingersoll inspirational quotes in Tamil
1.உலகத்திலேயே மிகவும் மலிவான பொருள் அன்புதான். மிக விலை உயர்ந்ததும் அதுதான்.
2.பணாதிபதிகளின் மாளிகைகளைவிட ஏழைகளின் குடிசைகளிலேதான் அதிகமான அன்பு வாசம் செய்கிறது. அன்பு வாங்குபவனுக்கும் கொடுப்பவனுக்கும் பத்து மடங்கு லாபத்தை உண்டாக்கக் கூடியது.
3.எந்த அளவுக்கு உங்கள் அறிவை தொழிற்கல்வியோடு சேர்த்துப் பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கே முன்னேறுவீர்கள்.
4.மனிதனின் அதிர்ஷ்டம் அவன் தலைவிதியில் இல்லை. அவன் நடத்தையில்தான் இருக்கிறது.
5.இன்பத்தை அனுபவிக்க எண்ணினால் பிறர் இன்பம் அடைய வழி செய்ய வேண்டும். குறுக்கு வழியையும் கோணல் நடத்தையையும் கடைப்பிடிப்பதால் நிச்சயமாக நீங்கள் இன்பம் துய்க்க முடியாது.
6.ஆண்கள் மரங்கள். பெண்கள் அம்மரத்தைச் சுற்றிப்படரும் கொடிகள். குழந்தைகள் அக்கொடிகளில் குலுங்கி ஆடும் நறுமண மலர்கள்.
7.துருப்பிடித்த இரும்பும் சோம்பல் ஏறிய உடம்பும் உதவாது.
8.நன்மையும் தீமையும் மனிதனது அனுபவத்தாலும் சிந்தனையாலும் தீர்மானிக்கப்பட்டது. நன்மைக்கு மட்டும் உங்களைத் திசை திருப்புங்கள்.
9.மகிழ்ச்சி அடைவதற்கான வழி மற்றவர்களையும் மகிழ்ச்சி கொள்ளச் செய்வதே.
10.தன் உழைப்பைத் தானே அறுவடை செய்யும் உலகில் பிறந்து இருக்கிறீர்கள். உங்களுக்கு எல்லா வசதிகளும் இந்த உலகில் உள்ளது. அப்படியும் வறுமை இருக்கிறதென்றால் அது உங்கள் தவறுதான்.
11.கருத்து வேறுபாடுகளை நாகரீகத்துடன் ஏற்றுக் கொள்வதும் அவற்றை அழுத்தமாக எதிராளிகள் சுட்டிக்காட்டும்போது இரசிப்பதும் மனவளர்ச்சியின் உன்னதமான அடையாளமாகும்.
12.வாழ்க்கை முற்றிலும் இளந்தென்றலாக இருப்பதில்லை.அது முற்றிலும் சுழன்றடிக்கும் சூறாவளியாகவும் இருப்பதில்லை. இரண்டும் கலந்துள்ளதே வாழ்க்கை. முன்னதை அனுபவிக்கவும் பின்னதை எதிர்த்து நிற்கவும் மனிதன் அறிந்துகொள்ள வேண்டும்.
13.மானிட சமுதாயத்தை இழிவுபடுத்தவும் அடிமைப்படுத்தவுமே பயங்கர மூடக் கொள்கைகள் எல்லாம் உபயோகப்பட்டிருக்கின்றன.