பாரதிதாசன் சிந்தனை வரிகள் – தமிழ்
Bharathidasan Inspirational Quotes in Tamil
பாரதிதாசன் சிந்தனை வரிகள் – தமிழ்
Bharathidasan Inspirational Quotes in Tamil
பாரதிதாசன் சிந்தனை வரிகள் – தமிழ்
Bharathidasan Inspirational Quotes in Tamil
1.சுயநலத்தைக் கைவிடு. தெய்வத்தை முழுமையாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயமான செயல்களில் ஈடுபடு. எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வாய்.
2.தெய்வம் அறிவுக் கடலாக உள்ளது. அக்கடலில் நாம் ஒவ்வொருவரும் ஒரு திவலையாக இருக்கிறோம்.
3.நேர்மையாக வாழ்வதே சிறந்த தவம். தனிமையிலும், மற்றவர் மத்தியிலும் நேர்மையைப் பின்பற்றுங்கள்.
4.அணு அளவும் பிறரை ஏமாற்றாமல் வாழ்பவனை கடவுளுக்கு நிகராக உலக மக்கள் மதிப்பர்.
5.பிறரிடம் எதற்காகவும் கையேந்தக் கூடாது. பிறரிடம் கையேந்தி வாழ்பவன் தன்னைத் தானே விலைப்படுத்திக் கொள்கிறான்.
6.பிறர் குற்றங்களை மன்னிக்கும் பெருந்தன்மை, நல்ல மனிதர்களிடம் மட்டுமே இருக்கும்.
7.பிச்சை ஏற்பவன் மான அபிமானத்தை விட்டு விடுகிறான்.
8.அறிவே அனைத்திலும் சிறந்தது. மனம் அதற்கு அடங்கி நடந்தால் வாழ்வு சிறந்து விளங்கும்.
9.மதிப்புடன் வாழ்ந்தவனுக்கு நேரும் அவமானம், மரணத்தை விட அதிக துன்பத்தை உண்டாக்கும்.
10.சிறுவயதில் உண்டாகும் அபிப்ராயம் மிகவும் வலிமை மிக்கது. அதை எளிதில் மாற்ற முடியாது.
11.ஏழைகள் செய்யும் அநியாயத்தை விட, பணக்காரர்கள் செய்யும் அநியாயம் அளவில் அதிகம்.