கதே சிந்தனை வரிகள் – தமிழ் #01
Goethe inspirational quotes in Tamil(PART 01)
கதே சிந்தனை வரிகள் – தமிழ் #01
Goethe inspirational quotes in Tamil(PART 01)
கதே சிந்தனை வரிகள் – தமிழ் #01
Goethe inspirational quotes in Tamil(PART 01)
1.அயலாருக்கு அன்பு செய்வதில் ஆனந்தம் காண்பவனே உண்மையில் இன்பம் காண்பவன் ஆவான்.
2.எவன் தன் வீட்டில் அமைதியைக் காண்கிறானோ அவன் மிக மிக மகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.
3.இசை மகிழ்ச்சியை அதிகமாக்கும்; துன்பத்தைக் குறைக்கும்; நோயை அகற்றும்; கோபத்தை ஆற்றும், உள்ளத்தில் அமைதி உடையவரே இசையில் இன்பத்தை அறிவர்.
4.இறுதியில் இலட்சியத்தை அடைவிக்கும் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஓர் இலட்சியமாயிருத்தல் வேண்டும்.
5.தன்னுடைய சக்திகளைப் பயன்படுத்துவதில் சந்தோஷம் காணாதவன் சந்தோஷத்தைக் காணப்போவதே இல்லை.
6.நீங்கள் சொல்லித்தரும் படிப்பு ஒரு குழந்தையை மகாத்மாவாக்க வேண்டும் என்பதில்லை; மனிதனாக ஆக்கினால் போதும்.
7.கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும். தீமையை நன்மையால் வெல்ல வேண்டும்.
8.வாழ்க்கையில் சிக்கனமாக இருத்தல் என்பது பாதி வெற்றிக்குச் சமம்.