கதே சிந்தனை வரிகள் – தமிழ் #02
Goethe inspirational quotes in Tamil(PART 02)
கதே சிந்தனை வரிகள் – தமிழ் #02
Goethe inspirational quotes in Tamil(PART 02)
கதே சிந்தனை வரிகள் – தமிழ் #02
Goethe inspirational quotes in Tamil(PART 02)
9.கையிலுள்ள பணம் தீரப்போகும் பொழுதுதான் அநேகர் அதைச் சிக்கனமாகச் செலவு செய்ய ஆரம்பிப்பார்.
10.நண்பனுக்காக உயிரைக் கொடுப்பது என்பது எளிது; ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பது அரிது.
11.ஒவ்வொன்றிலும் நன்மையைக் காணவும் போற்றவும் அறிவதே உண்மையிடம் நமக்கு ஆசை உண்டு என்பதற்கு அடையாளம்.
12.நேர்வழியில் அடைய முடியாததை ஒருநாளும் தவறான வழியில் அடைய முடியாது.
13.பணம் தேடுவதற்கு முட்டாளுக்குக்கூடத் தெரியும்; ஆனால், அதைச் செலவு செய்வதற்கு அறிஞருக்குத்தான் தெரியும்.
14.பெரியோர் பேச்சு அறிவு தரும்; பெரியோர் மௌனம் அன்பு பெருகும்.
15.இதுவரை யாரும் கூறாததைக் கூறுவது ஒன்றே சிறப்பு என்று எண்ண வேண்டாம்; இதற்குமுன் யாரும் கூறவில்லை என்று எண்ணுமாறு அதைக் கூறுவதும் சிறப்பேயாகும்.
16.மன தைரியத்தை இழந்துவிட்டால் மனிதன் எல்லாவற்றையும் இழந்தவனாகிறான்.