ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Shakespeare inspirational quotes in Tamil(PART 01)
ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Shakespeare inspirational quotes in Tamil(PART 01)
ஷேக்ஸ்பியர் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Shakespeare inspirational quotes in Tamil(PART 01)
1.அனுபவம் ஓர் உயர்ந்த நகை; அது அரியதாகத்தான் இருக்கும். ஏனெனில் மிகவும் கூடுதலான விலை கொடுத்தே அது வாங்கப்பட்டிருக்கிறது.
2.அறிஞர்கள் தங்கள் நஷ்டங்களுக்காக அலறுவதில்லை; ஏற்பட்ட தீமைகளை எப்படி மாற்றுவது என்பதையே உவகையுடன் சிந்திப்பார்கள்.
3.சாவு வருவதற்கு முன்னரே கோழை பல தடவை செத்துவிடுகிறான்.
4.துக்கம் உள்ளத்தைக் கவ்வும்போது இசை ஓடிவந்து விடுவிக்கும்.
5.உங்களைத் தெரிந்து கொள்ள உங்கள் மூளையை உபயோகியுங்கள்; பிறரைத் தெரிந்து கொள்ள உங்கள் இதயத்தை உபயோகியுங்கள்.
6.காதல் கண்களால் காண்பது இல்லை; மனதால் பார்ப்பது.
7.காதல் கண்மூடித்தனமானது. காதலர்கள் தாங்கள் செய்யும் தவறுகளைக் காணமாட்டார்கள்.
8.நேரத்தை விரயம் செய்யாதே; தாமதித்தால் பொழுது மட்டுமல்ல, பொருள் நஷ்டமும் வரும்.
9.ஒரு நிமிடம் தாமதமாக வருவதைவிட மூன்று மணி நேரத்திற்கு முன்னதாக வந்துவிடுவதே சிறந்தது.