விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Vivekananda inspirational quotes in Tamil(PART 01)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Vivekananda inspirational quotes in Tamil(PART 01)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Vivekananda inspirational quotes in Tamil(PART 01)
1.ஆசைக்கு கண்ணில்லை. அது மனிதனை நரகத்தில் தள்ளி விடும். அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.
2..எதையும் தெரியாது என்று சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு அஞ்சாத போர்வீரனைப் போல செயல்படு.
3.நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே உலகிலுள்ள மற்றவர்களை வெல்ல முடியும்.
4.உன்னைப் பற்றி எண்ணாத நேரத்தில் மட்டுமே, நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் நீ அனுபவிக்கிறாய்.
5.விக்ரஹத்தைக் கடவுளாகக் கருதலாம். ஆனால் கடவுளே விக்ரஹம் என்று தவறாக எண்ணுவது கூடாது.
6.எல்லா உயிர்களும் கடவுளின் அம்சம் என்பது உண்மை தான், இருந்தாலும் அனைத்திலும் மேலான உயர்ந்த கோயிலாக மனிதன் இருக்கிறான் என்பதை மறந்து விடாதீர்கள்.
7.பொறுமையைப் பின்பற்றினால் உலகம் உங்கள் காலடியில் கிடக்கும். பூமியைப் போல பொறுமையுடன் வாழுங்கள்.
8.வாழ்க்கையே போர்க்களம் போல இருக்கிறது. அஞ்சாமல் போரிடும் வீரனைப் போல எதிர்நின்று வெற்றிக்கனியைப் பறியுங்கள்.
9.சில நேரங்களில் இன்பத்தை விட, துன்பமே சிறந்த ஆசிரியராக இருந்து மனிதனின் நல்வாழ்வுக்கு வழிவகுக்கிறது.
10.தன்னை அடக்க கற்றால் இந்த தரணி முழுவதும் உன்னை வணங்கும்.