வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #02
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 02)
வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #02
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 02)
வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #02
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 02)
12.கடமையை உணர்ந்து செயல்படு. காலமறிந்து பணியாற்று. உடலும் உள்ளமும் அமைதியில் திளைக்கும்.
13.அனைத்தும் ஒன்று என்று அறிந்தவன் செய்யும் செயல்கள் அனைத்தும், அன்பின் வெளிப்பாடாக இருக்கும்.
14.ஆக்கப்பூர்வமான விஷயத்தில் அறிவைச் செலுத்து. ஊக்கமுடன் பாடுபடு. உயர்வு பெறுவது நிச்சயம்.
15.உள்ளத்தில் ஒன்றும் உதட்டில் ஒன்றுமாக பேசுபவன், தனக்கு தானே பகைவனாகி அழிந்து விடுவான்.
16.தேவையான நேரத்தில் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் பிறரைத் திருத்தும் நோக்கில் வெளிப்பட வேண்டும்.
17.கோபப்படும் போது உடலின் ஜீவ காந்த சக்தி அதிகமாக வெளியேறுவதோடு மனமும் சமநிலையை இழக்கிறது.
18.கோபத்தால் பிறருக்குத் துன்பம் உண்டாவதோடு தனக்கும் துன்பம் நேர்வதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
19.கடமையுணர்வுடன் பணியாற்றுங்கள். அதன் மூலம் உங்கள் உரிமைகளும், நலன்களும் முழுமையாக பாதுகாக்கப்படும்.
20.கவலைப்படுவதால் மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது.
21.நம் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில் மனித வாழ்வு உருண்டு கொண்டிருக்கிறது. அதற்குள் நான் யார் என்பதற்கு விடை தேடுங்கள்.
22.ஆசையை சீர்படுத்தி வாழ்ந்தால் வாழ்வே ஆனந்த மயமாகி விடும்.