வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #03
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 03)
வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #03
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 03)
வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #03
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 03)
23.அறிவை உணர்ச்சி வெல்வது இயல்பு. அறிவால் உணர்ச்சியை வெல்வது உயர்வுக்கு வழிவகுக்கும்.
24.பிறர் மீது கோபம் கொள்ளும் போது அந்தக் குறை நம்மிடம் இருக்கிறதா என்றும் சிந்திக்க வேண்டும்.
25.பிறரைக் குத்திக் காட்டுவது போல அறிவுரை சொல்லக் கூடாது. தவறை உணர்ந்து திருந்தும் விதத்தில் அமைய வேண்டும்.
26.ஆசைகளை அடியோடு ஒழிக்க முடியாது. அதை சீரமைத்துக் கொள்வதே நல்லது.
27.பிரச்சனை குறுக்கிடும் போது, மனம் தளர்வது கூடாது. நேர்வழியில் துணிவுடன் போராட வேண்டும்.
28.மனிதனின் வெற்றி, மதிப்பு எல்லாம் அவனுடைய மனதைப் பொறுத்தே அமைகிறது.
29.அமைதி எங்கு தேடினாலும் கிடைக்கப் போவதில்லை. மனதின் உள்ளிருந்து தான் அதைப் பெற்றாக வேண்டும்.
30.திறமையின்மை, பயம் இரண்டும் மனிதனைக் கவலைக்குழியில் தள்ளிவிடும் அபாயகரமானவை.
31.தீர்க்க முடியாத துன்பம் என்று உலகத்தில் ஒன்று கிடையாது. தீர்வுக்கான வழி தெரியாமல் தான் பலரும் தவிக்கிறார்கள்.
32.மனிதன் தன்னை உயர்த்திக் கொள்வதும், தாழ்த்திக் கொள்வதும் அவரவர் மனதைப் பொறுத்தே அமைகிறது.
33.உண்மையில் எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், மனதில் எழும் ஒழுங்கற்ற எண்ணங்களே.