வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #04
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 04)
வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #04
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 04)
வேதாந்த மகரிஷி சிந்தனை வரிகள் – தமிழ் #04
Vedanta Maharshi inspirational quotes in Tamil(PART 04)
34.எண்ணத்தில் ஒழுங்கு இருந்தால் எண்ணியதெல்லாம் நடக்கும்.
35.வாங்கும் கடனும், தேங்கும் பணமும் ஒருவரிடமே வளரக் கூடாது. இல்லாவிட்டால் மனநிம்மதி குறையும்.
36.உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம்.. இதுவே நல்லோரின் இலக்கணம்.
37.உழைப்பால் மனிதன் தலைநிமிர்ந்து வாழலாம். மற்றவர்களையும் வாழ வைக்கலாம்.
38.அளவாக உணவு சாப்பிட்டால், உடல் அதை ஜீரணிக்கும். அதிகமானால், உணவு உடலைச் ஜீரணித்து விடும்.
39.தன்னைத் தானே உயர்த்திக் கொண்டால் தான், மனிதன் இடைவிடாத இன்பநிலையை அடைய முடியும்.
40.உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே, மனிதனுக்கு பெரிய எதிரியாக இருக்கிறது.
41.திறமை, தைரியம் இரண்டும் உற்சாகத்தைப் பெருக்கும் காரணிகள்.
42.மனம் தான் வாழ்வின் விளைநிலம். அதன் தன்மையைப் பொறுத்தே ஒருவரின் வாழ்வு அமைகிறது.
43.எண்ணத்தில் உறுதியும், ஒழுங்கும் இருந்துவிட்டால் நாம் எண்ணியது எல்லாம் அப்படியே நடந்துவிடும்.
44.தேவைகளைப் பெருக்குவது நல்லதல்ல. இதனால் சமநிலை இழந்து மனம் பாவத்தில் ஈடுபடுகிறது.