விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Vivekananda inspirational quotes in Tamil(PART 04)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Vivekananda inspirational quotes in Tamil(PART 04)
விவேகானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Vivekananda inspirational quotes in Tamil(PART 04)
31.மனிதனுக்கு மன அமைதியைத் தருவதுதான் மதத்தின்
அடிப்படை இலட்சியமாகும்.
32.லட்சியம் உடையவன் ஆயிரம் தவறுகள் செய்தால் அது இல்லாதவன் ஐயாயிரம் தவறுகள் செய்வான் என்பது உறுதி. ஆதலால் லட்சியம் மிகவும் தேவை.
33.கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனைவிடச் சிறந்தவன் ஆவான்.
34.எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே நான் மகாத்மா என்பேன்.
35.அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.
36.எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவனே அறிவாளியாவான்.
37.தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.
38.உலகில் உள்ள மக்கள் உன்னை புகழ்ந்தாலும் சரி இகழ்ந்தாலும் சரி. நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவேனும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும்.
39.அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது.
40.துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது. வேறு எதனாலும் அன்று.