பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #07
Bharathiyar inspirational quotes in Tamil(PART 07)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #07
Bharathiyar inspirational quotes in Tamil(PART 07)
பாரதியார் சிந்தனை வரிகள் – தமிழ் #07
Bharathiyar inspirational quotes in Tamil(PART 07)
61.மூலைக்கு மூலை உடற்பயிற்சி சாலை அமைத்தால் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகும்.
62.உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.
63.சுயநலத்தை விடு. தெய்வத்தை பூரணமாக நம்பு. உண்மையை மட்டும் பேசு. நியாயத்தைப் பின்பற்று.
64.நடைமுறைக்கு ஒத்து வராத விஷயத்தை ஞானம் என்று சொல்வது பிழை.
65.பள்ளிக்கூடங்கள், தொழிற்சாலைகள் பெருகி விட்டால் சிறைச்சாலைகளின் எண்ணிக்கை குறையும்.
66.செல்வம் தேட உலகில் பல வழிகள் இருந்தாலும், அவரவர் தகுதியறிந்து தேடுவதே நல்லது.
67.பிறர் நம்மைத் தாழ்வாகக் கருதவோ, நடத்தவோ இடம் அளிக்கக்கூடாது.
68.தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும், மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது.
69.தன்னம்பிக்கை, உற்சாகம் இரண்டும் இருந்தால் உடம்பில் எந்த வியாதியும் நுழைய முடியாது.
70.குற்றத்துக்கு காரணம் அறியாமையே. குற்றம் செய்யாமல் இருக்க விரும்பினால் நல்லவர்களுடன் பழக வேண்டும்.