வினோபாஜி சிந்தனை வரிகள் – தமிழ்
Vinopaji inspirational quotes in Tamil
வினோபாஜி சிந்தனை வரிகள் – தமிழ்
Vinopaji inspirational quotes in Tamil
வினோபாஜி சிந்தனை வரிகள் – தமிழ்
Vinopaji inspirational quotes in Tamil
1.மக்கள் அனைவருமே நாராயணர்களே என்பதை அனுபவம் மூலம் உணர்ந்து கொள்வது தான் ஆன்மிகம்.
2.உலகம் முழுவதும் அச்சம் மண்டியிருப்பதற்குக் காரணம் அனைவரின்
உள்ளங்களிலும் பயம் புகுந்துள்ளது.
3.மக்களுக்கு நியாயத்தை உணர்த்துதல், அவர்களை நியாயத்திற்கு
கட்டுப்படச் செய்தல் சத்தியாகிரகத்தின் ஓர் அங்கமாகும்.
4.பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலை செய்யக்கூடாது.
பிறர் நன்மைக்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும்.
5.அராஜகச் செயல்கள் பெருகுவதற்கு காரணமே மன உறுதியின்மைதான்.
அஹிம்சை நெறியுடைய நாட்டிற்கு காவல்துறை தேவையில்லை. தொண்டர் படையே போதுமானது.
6.சூரியன் எத்தகைய வேற்றுமையுமின்றி எல்லோருக்கும் ஒரே மாதிரியான
ஒளி தருகிறது. அதுபோல் நாமும் யாரிடமும் வித்தியாசம் இல்லாமல் பழக வேண்டும்.
7.கற்பனையின் சிறகுகளைக் கிள்ளாதே. அதற்கு மாறாக, எண்ணத்தால்
பரந்த மனப்பான்மை கொள்.
8.வாழ்வில் உயரிய நோக்கமும், ஆர்வமும் இல்லாவிட்டால் ஒரு
அடிகூட உன்னால் முன்னேற முடியாது.
9.மனதின் சக்தியை உணர்ந்து நடந்து கொள். 'நிச்சயம் வாழ்வில்
முன்னேறுவேன்' என்று செயல்படு.
10.விலங்கு போல இழிவாக நடந்து கொள்ளாதே.
மனிதப்பிறவியை முன்னேறுவதற்கான
கருவியாக பயன்படுத்து.
11.கடவுளை நிச்சயமாகக் காணமுடியும். அதற்கு தேவை நம்பிக்கை.