வியாசர் சிந்தனை வரிகள் – தமிழ்
Vyasar inspirational quotes in Tamil
வியாசர் சிந்தனை வரிகள் – தமிழ்
Vyasar inspirational quotes in Tamil
வியாசர் சிந்தனை வரிகள் – தமிழ்
Vyasar inspirational quotes in Tamil
1.கோபத்தை கைவிட்ட மனிதனின் வாழ்வில் துன்பம் குறுக்கிடுவதில்லை.
2.புலன்களின் கவர்ச்சி அறிஞர்களைக் கூட தடுமாறச் செய்து விடுகிறது.
3.தர்மத்தில் நம்பிக்கை இல்லாதவனுக்கு மற்ற நல்ல விஷயங்களிலும் நம்பிக்கை ஏற்படுவதில்லை.
4.உயிருடன் இருக்கும் வரை உடன்பிறந்த குணங்கள் ஒருவரை விட்டு நீங்குவதில்லை.
5.நல்வழியில் செல்வம் தேடி நல்லதையே செய்யுங்கள்.
6.தர்மம் வகுத்த வழியில் பணம் சம்பாதியுங்கள். வேதம் விதித்த வழியில் வாழ்க்கை நடத்துங்கள்.
7.பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.
8.பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால், அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.
9.நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து விடுகின்றன. தர்மம் இருக்குமிடத்தில் எல்லா நன்மையும் உண்டாகும்.
10.புத்தியால் மனதை அடக்கியாள்பவன் வெற்றி இலக்கை எட்டுவது உறுதி.