வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Vallalar inspirational quotes in Tamil(PART 01)
வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #01
Vallalar inspirational quotes in Tamil(PART 01)
1.நம் வாழ்க்கை முறை மிகத் தவறானது என்பதை உணர்ந்து மாற்றி அமைக்க முழுமூச்சுடன் பாடுபட வேண்டும்.
2.நாம் பல பிறவிகளைக் கடந்து, மேலான மனிதப்பிறவி எடுத்தது இறைவனின் திருவருளைப் பெறுவதற்காகத் தான்.
3.உண்மையைப் பேசுங்கள். அது உங்கள் வார்த்தைகளைப் பாதுகாக்கும்.
4.உள்ளத்தில் தயவு இருந்தால், கடவுளின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும்.
5.பசித்தோர் முகம் கண்டால் இரக்கம் கொள்ளுங்கள். ஜீவகாருண்யமே பேரின்பத்தின் திறவுகோல்.
6.உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றுமாக இருப்பவர்களின் உறவை நாட வேண்டாம்.
7.கண்மூடி பழக்கமெல்லாம் மண் மூடிப் போக வேண்டும்.
8.மன ஒருமையுடன் கடவுளின் திருவடியை வணங்கும் நல்லவர்களோடு பழகுங்கள்.
9.மனத்தூய்மை உள்ளவனுக்கு அருகில் கடவுள் இருக்கிறார். தூய்மை அற்றவன் பக்கம் அவர் நெருங்கக்கூட மாட்டார்.
10.உனக்காக மட்டுமின்றி உன்னைச் சுற்றி இருப்போருக்காகவும் பிரார்த்தனை செய்.