வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Vallalar inspirational quotes in Tamil(PART 02)
வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #02
Vallalar inspirational quotes in Tamil(PART 02)
11.குற்றம் புரிவது மனித இயல்பு. அதையும் குணமாக ஏற்று அருள்வது கடவுளின் இயல்பு.
12.அறிவு என்னும் குருநாதரை அலட்சியப்படுத்தும் மனம் தடுமாறித் திரியும்.
13.கடுகடுத்த எண்ணம், பேச்சு போன்றவற்றை அறவே கைவிடுங்கள். அனைவரிடமும் அகம் குளிர முகமலர்ச்சியுடன் பழகுங்கள்.
14.கனவிலும் வஞ்சனை எண்ணம் இல்லாத நல்லவருக்கே கடவுளின் அருள் கிட்டும்.
15.கடவுளின் கருணைக்கு நிகரான கருணை வேறில்லை. அவரை வாழ்த்தி வணங்கினால் எல்லாம் நலமாக அமையும்.
16.கொடுமையான நோன்பு இருப்பதைக் காட்டிலும் உயிர்களைக் கொல்லாமையே விரதங்களில் சிறந்தது.
17.பிறரைக் குறை சொல்லாமல், நாம் நடக்கும் வழியில் குற்றம் நேராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
18.கடவுளுக்குச் செலவழிக்கும் பணத்தை, உணவின்றி வாடும் ஏழைகளின் வயிற்றில் நிரப்புங்கள்.
19.கடவுள் ஒன்றும் கற்பனையானவர் அல்ல. அவர் ஒருவரே மட்டுமே சத்தியமானவர்.
20.உடலை வருத்தி நோன்பு மேற்கொள்வதை விட, யாரையும் துன்புறுத்தாமல் இருப்பதே சிறந்தது.