வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Vallalar inspirational quotes in Tamil(PART 03)
வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Vallalar inspirational quotes in Tamil(PART 03)
21.கடவுளின் பெருமையைப் பேசினால் வாய் மணக்கும். கோயிலுக்குச் சென்று அவரைத் தரிசித்தால் மனம் குளிரும்.
22.நானே பெரியவன் என்று இறுமாப்பு கொள்வது நல்லதல்ல
23.பிழைப்புக்காக, குணம் இல்லாதவனின் வீட்டு வாசலில் நாய் போல இருப்பது கூடாது.
24.உண்மையை மட்டும் பேசுங்கள். அது உங்களின் கவுரவத்தைப் பாதுகாக்கும்.
25.பகல் உணவுக்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுங்கள். இரவு உணவுக்குப் பின் சிறிது தூரம் நடந்து வாருங்கள். இது மனதுக்கும் உடலுக்கும் நல்லது.
26.நீங்கள் எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் பிறருக்கு இடையூறு இல்லாத விதத்தில் பார்த்துக் கொள்ளுங்கள்.
27.சூரியன் தினமும் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலமும் ஒவ்வொரு நாளாய் விரைந்து ஓடுகிறது.
28.எத்தனை படிகள் என்று மலைக்க வேண்டாம். எல்லாவற்றையும் கடந்து மேலேறி விடலாம். முயற்சியைக் கைவிடாதீர்கள்
29.உடம்பில் இருக்கும் உயிர் ஒன்று தான். அதுபோல, இந்த உலகத்தில் இருக்கும் கடவுளும் ஒருவர் தான்.
30.உயிர்க்கருணை இல்லாதவர் செய்யும் வழிபாடும், தியானமும் எதற்கும் பயன்படாது.