சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Sivananda inspirational quotes in Tamil(PART 03)
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #03
Sivananda inspirational quotes in Tamil(PART 03)
21.மனச்சோர்வு இல்லாமல் துன்பத்தை பொறுமையுடன் ஏற்றுக் கொள்பவனே மன உறுதி மிக்கவன் ஆவான்.
22.வயிறு புடைக்க உணவு சாப்பிடக் கூடாது. எப்போதும் உணவில் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
23.எளிய வாழ்வையும், உயர்ந்த எண்ணத்தையும் கொண்டவனாக மனிதன் இருக்க வேண்டும்.
24.எண்ணம், சொல், செயல் மூன்றாலும் யாருக்கும் துன்பம் செய்யாதீர்கள். சுயநலமின்றி பிறரை நேசியுங்கள்.
25.பெருந்தன்மையுடன் பிறருக்கு உதவுங்கள். நேர்மையான வழியில் உழைத்துப் பொருள் தேடுங்கள்.
26.உண்ணும் முன் ஒருநிமிடம் கடவுளைப் பிரார்த்தனை செய்வதன் மூலம் உணவு புனிதம் அடைகிறது.
27.வாரம் ஒருமுறை விரதம் மேற்கொள்ளுங்கள். முடியாவிட்டால் பால், பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
28.அன்றாடம் சிறிது நேரமாவது நடைப்பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடுங்கள்.
29.யாரையும் புண்படுத்த வேண்டாம். அனைவரிடமும் அன்பு காட்டுங்கள்.
30.தேவைகளைக் குறைத்துக் கொண்டால் வாழ்வில் திருப்தியும், சந்தோஷமும் உண்டாகும்.