வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Vallalar inspirational quotes in Tamil(PART 04)
வள்ளலார் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Vallalar inspirational quotes in Tamil(PART 04)
31.பொய் சொல்வதையும், இட்டுக்கட்டி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். நடுவுநிலை தவறாமல் உண்மையை மட்டும் பேசுங்கள்.
32.உள்ளத்தில் தூய்மை இருக்குமானால், கடவுளுக்கும் உங்களுக்கும் இடையில் நெருக்கம் உண்டாகி விடும்.
33.அறிவால் கடவுளை ஒருபோதும் அளக்க முடியாது. ஆனால், நம் முயற்சிக்கு தகுந்தாற்போல, அவன் நம்மிடம் வெளிப்படுவான்.
34.கருணை உள்ளத்தில் ஊற்றாய் பெருகட்டும். உடம்பெங்கும் வழிந்தோடட்டும்.
35.பொய்யை மெய்யாக்கி போற்றத் தெரிந்தவர்கள் வணங்கி நிற்பது ஒரு தெய்வமே அல்ல, வழியாய் கொண்டதும் ஒரு வழி அல்ல.
36.பொய், பொறாமை, கபடம் போன்ற தீய குணங்களை கடவுள் வழிபாட்டால் மட்டுமே அகற்ற முடியும்.
37.நல்ல எண்ணத்தோடு இருங்கள். அதுவே நடத்தையைப் பாதுகாக்கும்.
38.உயிர்கள் மீது அன்பு செலுத்துவதே கடவுள் விரும்பும் சிறந்த வழிபாடு.
39.பிறருடைய பசியைப் போக்குவதோடு நமது கடமை முடிந்து
விடுவதில்லை. அவர்களின் துன்பத்தையும் களைய முயற்சிக்க வேண்டும்.
40.கற்பனை அனைத்தையும் கடந்தவன் இறைவன். அவனை நம் கற்பனை எல்லைக்குள் கொண்டுவர இயலாது.