சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Sivananda inspirational quotes in Tamil(PART 04)
1000
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Sivananda inspirational quotes in Tamil(PART 04)
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #04
Sivananda inspirational quotes in Tamil(PART 04)
31.எண்ணம் போலவே வாழ்வு அமைகிறது. எப்போதும் உயர்ந்ததை மட்டுமே சிந்தியுங்கள்.
32.பிறர் மீது பகையோ, பொறாமையோ கொள்ள முயலாதீர்கள். பொறுமையை எந்த நிலையிலும் இழக்காதீர்கள்.
33.உடல் ஆரோக்கியமும், பொருளாதார பாதுகாப்புமே மனிதனை நிம்மதியாக வாழ்வதற்கு துணைபுரிகின்றன.
34.பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவது அமைதிக்கு வழிவகுக்கும்.
35.பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். யாரையும் சார்ந்திருக்க வேண்டாம். சொந்தக் காலில் நில்லுங்கள்.
36.ஒழுக்கத்தை உயிராகப் போற்றுங்கள். நன்னெறி தரும் சான்றோரின் வரலாற்றைப் படியுங்கள்
37.வருமானத்தில் பத்தில் ஒரு பங்காவது தர்மம் செய்ய வேண்டும். எல்லா உயிர்கள் மீதும் அன்பு காட்டுங்கள்.
38.அதிகாலையில் எழுந்து பணிகளில் ஈடுபடுங்கள். இரவில் நீண்ட நேரம் கண் விழித்து கேளிக்கையில் ஈடுபடாதீர்கள்.
39.சத்தான எளிய உணவை உண்ணுங்கள். அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ உண்ணாதீர்கள்.
40.எந்த நிலையிலும் உண்மை பேசுங்கள். இனிமையும், எளிமையும் பேச்சில் நிறைந்திருக்கட்டும்.