சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Sivananda inspirational quotes in Tamil(PART 05)
சிவானந்தர் சிந்தனை வரிகள் – தமிழ் #05
Sivananda inspirational quotes in Tamil(PART 05)
41.காலையில் எழும்போதும், இரவில் தூங்கும் போதும் கடவுளை வழிபடு.
42.எளிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை இரண்டும் குறிக்கோளாக பின்பற்றுங்கள்.
43.தேவைகள் குறையத் தொடங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி வரத் தொடங்கும்.
44.எந்த நிலையிலும் உண்மை பேசத் தயங்காதீர்கள். பிறரிடம் நட்புணர்வுடன முகம் மலர்ந்து பேசுங்கள்.
45.தவறுகளைச் சிந்தித்து, உங்களை நீங்களே திருத்திக் கொள்ளுங்கள்.
46.பிறரைச் சார்ந்திருக்க வேண்டாம். உங்கள் தேவையை நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
47.சத்தியம் இருக்குமிடத்தில் எல்லா நற்குணங்களும் இருக்கும். சத்தியமும் கடவுளும் வெவ்வேறானதல்ல.
48.பிறர் நம்மை துன்புறுத்தும் போது, பழிக்குப் பழி வாங்க வேண்டும் என நினைப்பது நல்ல பண்பு ஆகாது.
49.உலகில் நீ ஒரு வழிப்போக்கன். இந்த உண்மையை உணர்ந்தால் மனம் நல்வழியில் திரும்பி விடும்.
50.கடவுள் சர்வாதிகாரியோ, கொடுங்கோலனோ அல்ல. அன்பு வடிவான நம் தாய் போன்றவர்.